News March 17, 2025
சேலத்தில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் அருள். இவரது 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் தினேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்றினர். பெற்றோர்களே உஷார். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Similar News
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
News July 9, 2025
சேலம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஜூலை 09) முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையம், ஆத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.