News August 4, 2024
சேலத்தில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, பட்டகோவில், சின்னகடைவீதி, அக்ரஹாரம், சத்யம்கார்னர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், கமலா மருத்துவமனை, அண்ணா நகர், ஹவுசிங் போர்டு, திருவள்ளுவர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
சேலம்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 22, 2026
சேலத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்

சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் வரும் 24-ஆம் தேதி மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கும் இம்முகாமில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை பயின்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
சேலம் மாணவி கொலை: ரூ.25,000 சன்மானம் அறிவிப்பு

சேலத்தில் ஓமியோபதி படித்து வந்த நெல்லை மாணவி வர்ஷினியை, தந்தை வரதராஜன் கடந்த 6-ஆம் தேதி படுகொலை செய்தார். பின்னர் தலைமறைவான அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது சென்னையில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைப் பற்றித் துப்பு கொடுத்தால் ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் எனப் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.


