News March 1, 2025
சேலத்தில் 16 லட்சம் மோசடி? ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

மாநகர ஆயுதப்படை எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன். இவர் லோகாம்பாள் என்பவரிடம் 16 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 3, 2025
மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் : காவல்துறை விழிப்புணர்வு

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச்.02) மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. * ஷேர் செய்யவும்.
News March 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.02 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News March 2, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (13351, 13352) இருமார்க்கத்திலும் ஒடிஷா மாநிலம், நோர்லா ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் மறு அறிவிப்பு வரும் வரை 2 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.