News February 24, 2025

சேலத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

image

“சேலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தில் ரூபாய் 880 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைகிறது; இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 50,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்; ஜவுளிப்பூங்கா அமைவதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 7,000 கோடிக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.

Similar News

News September 12, 2025

சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

இ-வாடகை கைபேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://mts.aed.tn.gov.in/evaadagai விண்ணப்பிக்கலாம்

News September 12, 2025

சேலம் அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை மேலும் நீட்டிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

News September 12, 2025

சேலம்: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️சேலம் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!