News September 22, 2024
சேலத்தில் 11 தொகுதியில் திமுக வெல்லும்: கே.என்.நேரு

2026 சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சேலத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.11) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 11, 2025
சேலம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
சங்ககிரி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

சங்ககிரி: புல்லாகவுண்டம்பட்டி ராமகூடல் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்.சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை, இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


