News March 29, 2025
சேலத்தில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி இன்று (மார்ச் 29) 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கடைவீதி உள்ளிட்டப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலே காணப்படுகிறது.
Similar News
News April 4, 2025
சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
News April 4, 2025
சேலம் மாவட்டம் உருவான தினம்!

இன்று (ஏப்ரல் 04) சேலம் மாவட்டம் உருவான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம், இன்று 234-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் எழில்மிகு ஏற்காடு, சேகோ ஜவ்வரிசி, சேலத்து மாம்பழம், கோட்டை மாரியம்மன் கோயில், கஞ்சமலை, சங்ககிரி கோட்டை, சேலம் வெண்பட்டு, உள்ளிட்டவை சேலம் மாவட்டத்தின் வரலாற்றை பறை சாற்றுகின்றன.
News April 4, 2025
தமிழில் பெயர் பலகை- ஆட்சியர் வேண்டுகோள்!

மே 15- க்குள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம்.தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே,
சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள்,வணிக சங்கங்கள்,உணவு நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகள்,தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் வேண்டுகோள்