News June 5, 2024
சேலத்தில் வெயிலின் தாக்கம் 93.2 டிகிரி

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-05) மாவட்டத்தில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Similar News
News March 3, 2026
ஆத்தூரில் பாஜக நிர்வாகிக்கு சிறை!

சேலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் மெடிக்கல் குமார், ஜே.ஜே. நகர் வேலுசாமியிடம் ₹3 லட்சம் கடன் பெற்று வழங்கிய காசோலை போதிய பணமின்றி திரும்பியது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் மெடிக்கல் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது.
News March 3, 2026
சேலம் : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
சேமிப்புத் தொகையில் இமாலய இலக்கை எட்டிய சேலம் அஞ்சலகம்!

சேலம் மாவட்ட அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹11,598 கோடி வசூலாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் சிறப்பாகப் பணியாற்றிய முகவர்களின் முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் எனச் சேலம் கிழக்கு அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார். இமாலய இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.


