News April 25, 2024
சேலத்தில் வெப்ப அலை!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News January 22, 2026
சேலத்தில் அதிரடி தீர்ப்பு!

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்ஷத் அலி(40), தனது மனைவி பல்கிஷை(28) வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், திருமணமான ஏழே மாதங்களில் பல்கிஷ் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஷத் அலியை கைது செய்தனர். மேலும் சேலம் மகளிர் நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அர்ஷத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
News January 22, 2026
சேலம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 22, 2026
சேலம்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


