News September 9, 2025
சேலத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

சேலம் – நாமக்கல் அருகே சாணாரப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் தினேஷ் (19) ஆகியோர் நேற்று(செப்.8) மோட்டார் சைக்கிளில் ஜலகண்டாபுரத்தில் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்துள்ளனர். காட்டு வளவு அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். சாலையில் கிடந்த தினேஷ் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News September 9, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்!

சேலம் மாநகரில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 9, 2025
சேலம் மக்களே Wi-Fi பயன்படுத்தும் போது எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்
பொது இடங்களில் உள்ள இலவச Wi-Fi பயன்படுத்தும்போது எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்புக்காக அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மோசடி புகார்களுக்கு 1930 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News September 9, 2025
வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் மதுரை-பெங்களூரூ கண்டோன்மென்ட்-மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது 8 பெட்டிகள் கொண்டிருந்த நிலையில் 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் செப்.11- ல் அமலுக்கு வரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.