News September 26, 2025

சேலத்தில் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே அழையுங்கள்!

image

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பிடித்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டின் (2025) புள்ளிவிவரங்களின்படி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் லஞ்சம் கேட்கும் எந்தவொரு அரசு அதிகாரியாக இருந்தாலும், பொதுமக்கள் அச்சமின்றி 0427-2418735 என்ற எண்ணுக்கு அழைத்து தைரியமாகப் புகார் அளிக்கலாம்! SHARE பண்ணுங்க!

Similar News

News September 26, 2025

சேலத்தில் 14,000 மாணாக்கர்கள் பயன்!

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் 2025- 2026 முதலாம் ஆண்டில் 7,845 மாணவிகள் மற்றும் 6,404 மாணவர்கள் இத்திட்டங்களால் பயன்பெற உள்ளனர். இத்தகைய முன்னோடி திட்டங்களின் மூலம் மாணவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். அதேபோல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 59,781 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

News September 26, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் (16382) இன்று (செப்.26) காலை 08.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் 14 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இரவு 11.00 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

சேலம் வழியாகச் செல்லும் முக்கிய ரயில் தாமதமம்

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாகச் செல்லும் கோவை-லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014) இன்று (செப்.26) காலை 08.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த நிலையில் மாலை 04.30 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் நேற்றும் தாமதமாக புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!