News January 24, 2025

சேலத்தில் ரஞ்சி டெஸ்ட்; தமிழ்நாடு 301 ரன்கள் குவிப்பு

image

சேலத்தில் நடைபெறும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சண்டீகர் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஆண்ட்ரே சித்தார்த்தின் அபார சதத்தால் 301 ரன்கள் குவித்து ஆல்-அவுட்டானது. தற்போது சண்டீகர் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Similar News

News September 10, 2025

சேலம்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செப்.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனி பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.11-ல் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), எர்ணாகுளம்-டாடாநகர் தினசரி எக்ஸ்பிரஸ் (18190), ஆழப்புலா-தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது ஈரோடு-சேலம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 9, 2025

சேலம் வழியாக செல்லும் வாராந்திர ரயில் நீட்டிப்பு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355), இராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஆகிய ரயில் சேவைகள் வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!