News January 22, 2026
சேலத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்

சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் வரும் 24-ஆம் தேதி மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கும் இம்முகாமில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை பயின்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News January 29, 2026
சைபர் மோசடிகளை தவிர்க்க இது அவசியம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஆன்லைன் கணக்குகளில் வலுவான மற்றும் யூகிக்க முடியாத கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in இணையதளம் அல்லது 1930 உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
சேலம்: இனி பேங்க் போக தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


