News March 30, 2024

சேலத்தில் முதல்வருடன் கமல் சந்திப்பு

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கமல், தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அத்துடன், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சேலத்தில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலினும் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இருவரும் இன்று சேலத்தில் சந்தித்து பேசினர்.

Similar News

News August 5, 2025

அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

image

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார்.

News August 5, 2025

கேப்டன் கில்.. எவ்வளோ மார்க் கொடுப்பீங்க?

image

ENG டெஸ்ட் தொடர் நடந்து முடிந்து விட்ட நிலையில், இதில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சீனியர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். 3 முறை 100+ ரன்கள், ஒரு 250+ ரன்கள் என ரன்குவிப்பில் அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை முறியடித்த கில், கேப்டனாகவும் களத்தில் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். ENG தொடரில் அவரின் பெர்பார்மென்ஸை நீங்க எப்படி பார்க்கிறீங்க?

News August 5, 2025

எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

image

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.

error: Content is protected !!