News March 4, 2025

சேலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

பழனிவேல் என்பவர் பனமரத்துப்பட்டி காந்தி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 13) 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று கோழி இறைச்சி சுத்தம் செய்யும் எந்திரத்தை மவுலீஸ்வரன் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 13, 2025

சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

image

சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து சாலை விதிகளையும், டிராபிக் சிக்னல்களையும் வாகன ஓட்டிகள் மதிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 13, 2025

சேலத்தில் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்!

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதையொட்டி வருகை மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (செப்.12) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 13, 2025

சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

ரயில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (06239/06240) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் செப்.15 முதல் நவ.25 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகின்றன.

error: Content is protected !!