News January 12, 2026

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

சேலத்தில் அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு முகாமினை வருகின்ற 24.01.2026 அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலையில்லா இளைஞர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும். SHARE IT

Similar News

News January 28, 2026

தாரமங்கலம்: வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

image

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார்-அருணா தம்பதியினரின் மூத்த மகள் ஹன்சிகா (4), தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளி வேனில் ஹன்சிகாவை அவரது தாய் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, ஹன்சிகாவின் தங்கை யாஷ்விகா (2) விளையாடிக்கொண்டே வேனுக்கு முன் சென்றுள்ளார். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியபோது, வேனின் சக்கரம் ஏறியதில் யாஷ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 28, 2026

சேலம்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் ஜன.30-ம் தேதி கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் (ம) விவசாய சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டு, தங்களது வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!