News August 23, 2024

சேலத்தில் மணமக்களை வாழ்த்திய இபிஎஸ்

image

அதிமுக பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ராஜா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News August 23, 2025

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

சேலம் மாவட்டத்தில் (ஆக.23) இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️காலை 9 மணி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நலத்திட்ட பணிகள் துவக்கம் சுற்றுலாத் துறை அமைச்சர்.
▶️காலை 10 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாவட்ட மாநாடு துவக்கம் குஜராத்தி திருமண மண்டபம் ஐந்து ரோடு.
▶️ காலை 10:30 ராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ராமகிருஷ்ண மடம்.

News August 23, 2025

சேலத்தில் ஆக.30க்குள் இதை செய்ய வேண்டும்!

image

சேலம் மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள், புதிதாக மேம்படுத்தப்பட்ட <>https://dish.tn.gov<<>>. என்ற இணையதளம் மூலம் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிற்சாலை உரிமம், வெளிமாநில தொழிலாளர்கள் பதிவுச் சான்று, ஒப்பந்த தொழிலாளர் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கூடுதல் இயக்குனர் தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

News August 23, 2025

சேலம்: மகளிர் உரிமைத்தொகை கேட்டு 75,830 விண்ணப்பம்!

image

கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.21- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத்தொகைக் கேட்டு மட்டும் சுமார் 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!