News August 6, 2024
சேலத்தில் போக்குவரத்து மாற்றம்

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று(6.8.24) முதல் வரும் 9ஆம் தேதி வரை 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டைகோவில், சின்னகடைவீதி, ஹவுசிங்போர்டு அண்ணா நகர், வள்ளுவர் சிலை, கலெக்டர் அலுவலகம், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம். திருச்சி ரோடு வழியாக வந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் செல்லலாம்.
Similar News
News August 5, 2025
சேலம்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்!

சேலம் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO மூலம் கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)
News August 5, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக கோவை-தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (03680) நாளை (ஆக.05) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 நிமிடங்கள் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் குறிப்பிடத்தக்கது.
News August 4, 2025
சேலம் மாவட்டத்திற்கு 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் புதன்கிழமை ஆகஸ்ட்-6 தேதி பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது. அதற்காக அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள் மாற்றாக 23ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்