News March 9, 2025
சேலத்தில் பெண்ணை கேலி, கிண்டல் செய்த வாலிபர் கைது

சேலம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது20). இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் பெண் ஒருவரை வேலைக்கு செல்லும்போது வழிமறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 10, 2025
டயர் வெடித்து ஒரே குடும்பத்தில் 25 பேர் படுகாயம்

சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமணத்திற்காக திருக்கடையூர் சென்று இன்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வரும்போது, பஸ்ஸின் டயர் வெடித்ததில் 25 பேர் படுகாயம் அடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் ஆறுதல் கூறினார். மேலும், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News March 9, 2025
4 விருதுகளைத் தட்டிச் சென்ற சேலம் கோட்டம்!

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) சார்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் எரிபொருள் சேமிப்பு, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக 4 விருதுகளை வென்று சிறப்பித்துள்ளது.
News March 9, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 9 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.