News December 12, 2025
சேலத்தில் பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

தர்மபுரியில் இருந்து காரில் யானை தந்தம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் கருப்பூர் சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் இருந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தர்மபுரியைச் சேர்ந்த 3 பேர், சேலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர், கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News March 10, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 9, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 9, 2026
விவசாயிகளுக்காக ‘இ-நாம் 2.0’ இணையதளம் அறிமுகம்

சேலம் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கும் ‘இ-நாம் 1.0’ தளம் தற்போது ‘இ-நாம் 2.0’ ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வெளிப்படையான முறையில் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்கலாம். மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இதில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


