News April 29, 2025
சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
சங்ககிரி அருகே நொடியில் பறிபோன உயிர்!

நாமக்கல்லை சேர்ந்த தினேஷ்குமாா் தனது நண்பரான சங்ககிரியை ஒழுகுபாறையை சோ்ந்த முனுசாமியுடன் (40) டூவீலரில் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றாா். வைகுந்தம் சுங்கச் சாவடிக்கு முன் உள்ள மேட்டுக்கடை பகுதியில் சென்றபோது,டூவிலர் பின்பக்க டயா் வெடித்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முனுசாமி உயிரிழந்தாா்.தினேஷ்குமாா் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
News October 31, 2025
சேலம் வழியாக சிறப்பு ரெயில்!

ரயில்வே நிர்வாகம், பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது. இந்த ரயில் (05271) இன்று (வெள்ளிக்கிழமை) பரவுனியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 2-ந் தேதி இரவு 8.18 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
News October 31, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.30) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


