News October 6, 2025

சேலத்தில் படியில் தவறிய முதியவர் பலி!

image

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையைச் சேர்ந்தவர் ராஜப்பா (65). வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு படியில் தவறி விழுந்த இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Similar News

News November 9, 2025

சேலம்: டிகிரி இருந்தால் போதும்.. வங்கியில் வேலை!

image

சேலம் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 9, 2025

சேலம்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

image

சேலம் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!