News March 29, 2024
சேலத்தில் நாளை முதலமைச்சர் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மலையரசன், சேலம் தொகுதி வேட்பாளர் செல்வ கணபதி ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை மாலை 6 மணி அளவில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அண்ணா திடலில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News November 3, 2025
சேலம்: ‘ஸ்பீடு போஸ்ட்’ சேவை மாணவர்களுக்கு தள்ளுபடி!

சேலம்: அஞ்சல்துறை சார்பில் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆவணங்களை ‘ஸ்பீடு போஸ்ட்’டில் அனுப்பும் போது சேவை கட்டணத்தில் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. நேரடியாக தபால் அலுவலகங்களுக்கு சென்று சில்லரை முறையில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி நேற்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 2, 2025
எடப்பாடி அருகே பழக்கடையில் புகுந்த கார்!

சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த தாயும் மகளும் பலத்த காயமடைந்தனர். மேலும் கடையிலிருந்து அனைத்து பழங்களும் நசுங்கி வீணானது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


