News April 9, 2025

சேலத்தில் நாளை மதுக்கடைகள் இயங்காது!

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Similar News

News April 25, 2025

சேலம்: அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர்  உத்தரவு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம்  தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

News April 25, 2025

மே 1- ல் கிராம சபைக் கூட்டம்- சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, வரும் மே 01-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அழைப்பு!

News April 25, 2025

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆஜர்

image

பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி அதன் மூலமாக முறைகேடு நடந்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (ஏப்.25) சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

error: Content is protected !!