News October 16, 2025
சேலத்தில் நாளைய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்

சேலத்தில் நாளை(அக்.17) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள் 1)தாண்டவராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் 2)இடங்கணசாலை நகராட்சி திருமண மண்டபம் இடங்கணசாலை3) கருப்பூர் சக்தி திருமண மண்டபம் கருப்பூர் 4)பெத்தநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம் மேல்நாடு ஊராட்சி 5)அயோத்தியபட்டினம் சின்னனூர் சமுதாயக்கூடம் 6)இடைப்பாடி ஸ்ரீ மஹால் திருமண மண்டபம், புதூர்.
Similar News
News October 16, 2025
கொளத்தூர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

மேட்டூர் அருகே கொளத்தூர் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டையூர் பரிசல்துறை அருகே, அடையாளம் தெரியாத நிலையில் தோல் உரிந்த ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வயதாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த ஆண் சடலத்தை, காவல்துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
News October 16, 2025
சேலம்: சித்தப்பாவை கொன்ற மகன் கைது!

சேலம்: கொங்கணாபுரம், மட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன் குப்புசாமி குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த குப்புசாமி, கத்தியால் முத்துசாமியை குத்திவிட்டு தப்பியோடினார். இதில் முத்துசாமி உயிரிழந்தார். இதில், கொங்கணாபுரம் போலீசார் குப்புசாமி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.
News October 16, 2025
சேலம் மாவட்டத்திற்கு புதிய மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, யாரும் எதிர்பாராத வகையில், பல்வேறு பேரிடர்கள் ஏற்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் அதிக மழை பெய்வதால், திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. இந்நிலையில் திடீர் வெள்ளம், காட்டுத்தீ, நிலச்சரிவு போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களுக்கு, புதிய ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.