News December 29, 2025
சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழுவே அல்ல: பாலு

அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு விதிமுறைகள், <<18701469>>சேலம் பொதுக்குழுவில்<<>> மீறப்பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். அந்த பொதுக்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும், மாமல்லபுரம் பொதுக்குழுவில் அன்புமணிக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு ECI அங்கீகாரம் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News January 30, 2026
₹30 மட்டும் செலுத்தி ஆண்டு முழுக்க இலவச சிகிச்சை

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற ஆண்டுக்கு ₹30,000 வரை ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம்’ காப்பீடு வழங்குகிறது. இதில் ஒரு குடும்பத்தில் 5 பேர் மட்டுமே பலனடைய முடியும். ஆண்டுக்கு வெறும் ₹30 மட்டும் செலுத்தி இத்திட்டத்தில் சேருங்கள். இ-சேவை மையத்திற்கு சென்று இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE THIS.
News January 30, 2026
BREAKING: கூட்டணியை இறுதி செய்தார் பிரேமலதா

திமுகவுடன் தேமுதிக கூட்டணியை இறுதி செய்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதா முதலில் 20+1 தொகுதிகள் கேட்ட நிலையில், தற்போது 8+1 வழங்க திமுக தலைமை இசைவு தெரிவித்துள்ளதாம். கூட்டணி தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய கையோடு, கனிமொழி, பிரேமலதாவுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பேன் என <<18991063>>பிரேமலதா நேற்று<<>> கூறியிருந்தார்.
News January 30, 2026
தகுதியான படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததா?

தமிழ்நாடு அரசு <<18995961>>அறிவித்துள்ள <<>>திரைப்பட விருதுகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை விட திரையில் வெற்றி பெற்ற படங்களுக்கே விருதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக SM-ல் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. அதேபோல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்காமல், வெற்றி பெற்ற படங்களில் நடித்த நடிகர், நடிகைகளே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


