News February 11, 2025
சேலத்தில் தொடரும் மது வேட்டை: சிக்கும் பெண்கள்

சேலம் வீராணம் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுவளவு மாரியம்மன் கோவில் அருகே யோகலட்சுமி மற்றும் மோகன் ஆகியோர் மது பாட்டில்களை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். அதனையடுத்து அவரிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெண்கள் மது வழக்கில் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாகிறது.
Similar News
News March 6, 2026
சேலம் ஓமலூர் அருகே பயங்கரம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது இடது பக்க இடுப்பு, வலது பக்க விலா எலும்பில் மச்சம் உள்ளது. அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 6, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா மார்ச் 10-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 7-ல் ஊராட்சிகளிலும், 9-ல் வட்டாரங்களிலும், மார்ச் 9 மற்றும் 12-ல் விற்பனை கண்காட்சிகளும் நடைபெறவுள்ளது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
News March 6, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அப்பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.05) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


