News September 7, 2025
சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் செப்டம்பர் 15 முதல் 24 வரை சேலம்,நால்ரோட்டில் உள்ள சாமுண்டி காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.இதன் மூலம் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் நகை வியாபார நிறுவனங்களில் வேலை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94437 28438, 98941 96425 அழைக்கவும்!SHARE
Similar News
News September 7, 2025
சேலம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 7, 2025
சந்திர கிரகணம்- இன்று மாலை கோயில் நடைகள் அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (செப்.07) மாலை 06.00 மணிக்கு சேலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் நடை சாத்தப்படுகிறது. அதேபோல், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நடை இரவு 07.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இக்கோயில்களில் நாளை (செப்.08) சுத்தப்படுத்தி நடை மீண்டும் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
News September 7, 2025
ரயில்களில் சிகரெட் பிடித்த 9,124 பேருக்கு ரூ.19 லட்சம் அபராதம்!

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பீடி, சிகரெட் பிடித்தவர்கள், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ மற்றும் பொருட்கள் எடுத்து வந்த நபர்கள் என மொத்தம் 9,124 பேர் சிக்கினர். இவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 19,000 அபராதம் விதித்து அதனை ஆர்பிஎப் போலீசார் வசூலித்துள்ளனர்.