News August 15, 2025
சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை சேலம் வருகிறார். இதன் காரணமாக, சேலம் மாநகரப் பகுதிகளில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 3, 2026
ஆத்தூரில் திமுக பேனர் கிழித்ததால் பரபரப்பு

ஆத்தூர் ஒன்றியம் செல்லியம்பாளையத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பத்திரம் மனோகரன் தரப்பில் வைக்கப்பட்ட இப்பேனர் சிதைக்கப்பட்டதைக் கண்டித்து, திமுக நிர்வாகிகள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
News March 3, 2026
சேலம்: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

சேலம் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


