News March 31, 2025
சேலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தேதி அறிவிப்பு

சேலம்: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அரசு அனுமதி பெற்று வரும் ஏப்.5ல் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ( SHARE பண்ணுங்க)
Similar News
News April 1, 2025
விரைவில் திருமணம் ஆக செல்ல வேண்டிய கோயில்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோயில் ஒரு அக்னி தலமாகும். இக்கோயிலில் உள்ள காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்குமாம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோட்டை எனும் பகுதியில் இக்கோயில் உள்ளது.
News April 1, 2025
சேலம்- சென்னை விமானம் புறப்படும் நேரம் மாற்றம்!

சேலம்- சென்னை விமானம் புறப்படும் நேர மாற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. நாள்தோறும் சென்னையில் இருந்து மதியம் 03.50 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 05.00 மணிக்கு சேலம் வந்து மீண்டும் மாலை 05.20 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு சென்னையில் தரையிறங்கும். சேலம் விமான நிலையத்தில் மார்ச் 30- ஆம் தேதி முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2025
சேலம்- டெல்லி செல்லும் லாரிக்கு ரூ.1,000 கூடுதல் செலவு

தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12.00 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லி செல்லும் ஒரு லாரிக்கு ரூபாய் 800 முதல் ரூபாய் 1,000 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.