News October 10, 2025
சேலத்தில் சோகம்: ஓய்வுபெற்ற போலீசார் உயிரிழப்பு!

சேலம்: அழகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 61). இவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (Additional SP) பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மதியம், இவர் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே தனது நண்பரான தீபனைப் பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது, மாடிப் படிக்கட்டுகளில் ஏறியபோது திடீரென கால் இடறி, கீழே தலைகுப்புற விழுந்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை
Similar News
News November 9, 2025
இணைய மோசடிகள் குறித்த புகாருக்கு 1930 அழைக்கவும்!

இணையவழி மோசடி மற்றும் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு இணையவழி சைபர் குற்றத்திற்கும் இரையாகினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
News November 9, 2025
சேலம் வழியாக கொல்லம் சிறப்பு ரெயில் இயக்கம்!

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.
News November 8, 2025
ஏற்காட்டில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்தக் கார்: ஒருவர் பலி!

ஏற்காட்டு கீரைக்காடு பகுதியில் எஸ்டேடில் பணிபுரியம் நவீன் (32), ஈஸ்வர் (23), பிரசாந்த் (32) ஆகிய மூவரும் நேற்று இரவு மது போதையில் காரில் பயணித்தாக கூறப்படுகிறது. சுமார் 12 மணி அளவில் காக்கம்பட்டி கொண்டை ஊசி வளைவில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த 25 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. பிரசாந்த் உயிர் இழந்தார். மற்ற இருவரும் சேலம் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


