News May 7, 2025
சேலத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்!

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஓசூர் நிறுவனத்தின் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் மே.3- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. கல்வி தகுதி; 12-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை. மேலும் விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கவும்.
Similar News
News August 7, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 7, 2025
மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வுப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “DON’T DRINK AND DRIVE” என்ற எச்சரிக்கையுடன், வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்க்குமாறு, பொதுமக்களை மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உயிர்கள் பாதுகாக்க சேலம் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
News August 7, 2025
சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில் பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.14- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், வரும் ஆக.17- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.