News December 28, 2025
சேலத்தில் சம்பவ இடத்திலேயே பலி!

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (கூலித் தொழிலாளி). இவர் வேலைக்குச் செல்வதற்காக பள்ளப்பட்டி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக பார்த்திபன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார், உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 23, 2026
சேலம்: மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் குத்திய கணவன் கைது

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மி பி என்பவர் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்ட போது அவரது கணவர் சதார் ஷெரீப் மது போதையில் தன்னை ஸ்க்ரூ டிரைவரால் மண்டையில் குத்தி காயப்படுத்தியதாக தெரிவித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் ஷெரீபை கைது செய்தனர்.
News January 23, 2026
சேலம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<


