News January 8, 2025
சேலத்தில் ஒரே ஆண்டில் 16 பேர் மீது குண்டர் சட்டம்!

சேலம் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட, 30 காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகளில், சிறை தண்டனை பெற்று, திருந்தாமல் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வரும், தொடர் குற்றவாளிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும், 16 திருந்தாத குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News February 5, 2026
சேலத்தில் குறைந்த விலையில் கார், பைக் வேண்டுமா!

சேலம் மாவட்ட காவல் துறையினரால் வரும் 9-ம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலம் மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணி முதல் தொடங்கும். இதில் 15 வாகனங்கள் (இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) ஏலம் விடப்பட்டுள்ளது. இதை ஷேர் பண்ணுங்க!
News February 5, 2026
சேலம்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News February 5, 2026
BREAKING: சேலத்தில் கருகிய நிலையில் சடலம்

சேலம், பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (80). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ராமசாமி தங்கியிருந்த அறையில் அவர் முற்றிலும் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


