News July 4, 2025

சேலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

image

சேலம் மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்குட்பட்டோர் https://www.salem.nic.in விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், சேலம் மாவட்ட நலச்சங்கம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Similar News

News July 4, 2025

சேலம்: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

image

சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் 0427 245 0241. ஷேர் பண்ணுங்க !

News July 4, 2025

சேலம் வீரர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தல்!

image

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற Para Armwresling போட்டியில், சேலம் மாவட்டத்தை சார்ந்த புஷ்பராஜ் என்பவர் கலந்து கொண்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு வலுத்தூக்கும் சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News July 4, 2025

சேலம் – திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜூலை 06- ஆம் தேதி முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!