News August 6, 2025
சேலத்தில் உள்ளூர் அரசு விடுமுறை

சேலம்: கோட்டை மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஆக.6) அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு உள்ளூர் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக வருகிற ஆக.23ஆம் தேதி வேலை நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News August 7, 2025
சேலம்: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி. ▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
News August 6, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 6, 2025
கடன் தொல்லையை தீர்க்கும் ஆறகளூர் கோயில்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!