News January 2, 2026

சேலத்தில் இளம் பெண் விபரீத முடிவு!

image

சேலம், கருப்பூரைச் சேர்ந்தவர் கௌசல்யா (28). இவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே கௌசல்யா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வலி அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Similar News

News January 23, 2026

சேலம்: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க phone-ல்

image

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

FLASH: சேலம் மேட்டூர் வழியாக செல்ல தடை!

image

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி மேட்டூர்-மாதேஸ்வரன் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் பேருந்து அல்லது கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!