News October 14, 2024
சேலத்தில் இரு சிறார்கள் படுகொலை

சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒடுவன்காடு பகுதியில் ராஜா என்பவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரம். பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகரன் தலைமறைவு. நில தகராறில் சிறார்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 26, 2025
சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
News August 26, 2025
சேலம்: இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரத்தில் 26.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; J.ஜெய்சல்குமார் (94981-78821) , P.குமார் (94981-74170), R.பால்ராஜ் (94436-21083), D.காந்திமதி (94981-75610), ஆகியோர் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
News August 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு!

சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது; வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை வீதிகளை முறையாக பரிசீலனை செய்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பயன்படுத்தப்படுவது அத்தியாவசியம் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் சாலையில் பயணிக்க வேண்டுமெனவும் காவல்துறை கேட்டுக்கொண்டது.