News April 26, 2025
சேலத்தில் இன்று 102.4 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதமடித்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயிலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தர்பூசணி, நீர்மோர், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.26) 102.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
Similar News
News September 15, 2025
சேலம்: போதை மாத்திரை – மாணவன் உட்பட 5 பேர் கைது!

எடப்பாடி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுகிறது என எடப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியார் லாட்ஜில் அந்த கும்பல் இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ராஜசேகர், ஜீவா, சுரேஷ்குமார், சசிகுமார், மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 5 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
News September 15, 2025
சேலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம் மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு செப்.16 மற்றும் 17 மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 15, 2025
சேலம்: ரயில்வே துறையில் வேலை!

சேலம் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <