News January 21, 2025
சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

சேலம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல், மாலை 4 வரை அம்மாபேட்டை, சீலியம்பட்டி, சூரமங்கலம், அரசநத்தம், கருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், டவுன் ஜலகண்டாபுரம், சின்னப்பம்பட்டி, மேட்டூர் டவுன், சேலம் கேம்ப், நங்கவள்ளி, மேச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
சேலம்: காதலன் கைவிட்டதால் இளம் பெண் விபரீதம்!

ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோபிகா. இவர் 5 ஆண்டுகளாக இளம்பிள்ளையை சேர்ந்த கார்த்திகேன் (25) என்பரை காலலித்து வந்துள்ளார். இதன் பின்னர் திருமணம் செய்ய கார்த்திகேன் மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார். இது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,காதலன் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News March 5, 2026
சேலம் கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!

2026-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 11 ரெகுலர் தாசில்தார்கள் உட்பட 45 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிருந்தாதேவி பிறப்பித்துள்ளார். இதில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளின் தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், ஊரக வளர்ச்சித் துறையில் 210 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இருவருக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


