News November 23, 2024
சேலத்தில் இன்று கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!
Similar News
News August 7, 2025
சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில் பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.14- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், வரும் ஆக.17- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. ரயில்வேயில் வேலை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 50 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர், முதுநிலை எழுத்தர் (கிளார்க்), இளநிலை எழுத்தராக பணியமர்த்தப்படுவர். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 7, 2025
வடசென்னை பட பாணியில் கஞ்சா கடத்தல்

சேலத்தில் சிறை கைதி மணிகண்டனை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்பு சிறையின் நுழைவாயிலில் மணிகண்டன் மீது மெட்டல்டிடெக்டர் கருவி கொண்டு சோதித்தனர். அப்போது அவர் ஆசன வாயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். மேலும், அஸ்தம்பட்டி காவல் துறையின் விசாரணை நடத்தினர்