News September 9, 2025
சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 9, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.11-ல் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), எர்ணாகுளம்-டாடாநகர் தினசரி எக்ஸ்பிரஸ் (18190), ஆழப்புலா-தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது ஈரோடு-சேலம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 9, 2025
சேலம் வழியாக செல்லும் வாராந்திர ரயில் நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355), இராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஆகிய ரயில் சேவைகள் வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.09) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.