News April 10, 2025
சேலத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, பல இடங்களில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT!
Similar News
News November 4, 2025
சேலம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மற்றும் அறியாத மின்னஞ்சல் இணைப்புகளை திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய மோசடிகளை தவிர்க்க விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
News November 3, 2025
சேலம்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <
News November 3, 2025
முதலமைச்சரை வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்!

இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் வந்த தமிழக முதலமைச்சருக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். மேலும் அதன் பின்னர் சாலை மார்க்கமாக சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு புறப்பட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


