News November 6, 2025
சேலத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

சேலம்: ஆடையூர் ஊராட்சிக்குட்பட்ட நாச்சிமுத்தூர் அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக தங்கராசு என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பணி நேரத்தில் பள்ளிக்குள்ளேயே மது போதையில் இருந்ததாகவும், இதனை தட்டி கேட்ட பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.
Similar News
News February 3, 2026
சேலம்: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 2, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
News February 2, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்

சேலம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 28-வயது ஓட்டுநர் திவாகர், 17-வயது பள்ளி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனால் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் திவாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


