News March 10, 2026
சேலத்தில் அரங்கேறிய கத்தி குத்து சம்பவம்!

சேலம் மன்னார்பாளையத்தில் தங்கி வேலை செய்த திருச்சியைச் சேர்ந்த தமிழரசன், பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; இது குறித்து வீராணம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ஜெகதீசனுக்கும் இடையே இருந்த முன்விரோதத்தால் இச்சம்பவம் நடந்தது தெரிந்தது; தமிழரசனை கத்தியால் குத்திய ஜெகதீசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
சேலம்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா இன்று (மார்ச் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 10, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


