News August 5, 2025
சேலத்தில் அமலுக்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து இன்னும் ஓரிரு வாரத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் சாலையில் ஸ்பீடு பிரேக் இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோன்ற இடத்தை தேர்வு செய்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Similar News
News August 5, 2025
சேலம்: காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம்: மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி இன்று(ஆக.5) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், ’கிரிப்டோ கரன்சி சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இதில், சிலர் கிரிப்டோ கரன்சிக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறி கிரிப்டோ கரன்சி இணைய வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. வழக்கு நடைபெறுவதால் பொதுமக்கள் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.
News August 5, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை கோரி 44,247 விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 02.08.2025 வரை நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
சேலம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL!

சேலம் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT