News September 8, 2024
சேலத்தில் அன்புமணி ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வருகை தந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக எம்எல்ஏ அருள் சதாசிவம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத் தியாகி குப்புசாமி இல்லத்தை இன்று அன்புமணி ராமதாஸ் (செப்.08) திறந்து வைக்கவுள்ளார்.
Similar News
News August 24, 2025
2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்!

சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.
News August 24, 2025
சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை!

சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News August 24, 2025
பெண் குழந்தைகளுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.