News September 26, 2025

சேலத்தில் அண்ணா மிதிவண்டி போட்டி!

image

சேலம் மாவட்டத்தில் 2025- ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நாளை (செப் 27) காலை மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி. மீ தூரமும், 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 26, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (26.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.i

News September 26, 2025

சேலத்தில் 14,000 மாணாக்கர்கள் பயன்!

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் 2025- 2026 முதலாம் ஆண்டில் 7,845 மாணவிகள் மற்றும் 6,404 மாணவர்கள் இத்திட்டங்களால் பயன்பெற உள்ளனர். இத்தகைய முன்னோடி திட்டங்களின் மூலம் மாணவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். அதேபோல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 59,781 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

News September 26, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் (16382) இன்று (செப்.26) காலை 08.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் 14 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இரவு 11.00 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!