News March 20, 2024

சேலத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Similar News

News December 15, 2025

சேலம் கொளத்தூரில் வெட்டி கொலை? பரபரப்பு

image

சேலம்: கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு ரத்த காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன நபர் கொளத்தூர் அருகே கருங்கலூர் பகுதியை சேர்ந்த முன்னால் ஐ.டி.ஊழியர் செல்வகுமார்(38) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடத்தினர் வருகின்றனர்.

News December 15, 2025

சேலம்: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

image

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள்<> இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 15, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முஸ்லிம், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி, சீக்கியர், சமணர், ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்க, அரசின் சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வரும் 18ம் தேதி மதியம் 3-30 மணிக்கு, ஆம்பல் கூட்ட அரங்கில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!