News April 7, 2025
சேலத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

“சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்” என்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக, ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) ஏப்ரல் 08, 15 ஆகிய நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
News April 7, 2025
மேட்டூரில் பாலியல் தொழில்: தம்பதி கைது

எடப்பாடியை சேர்ந்த பாக்கியம், அவரது கணவர் பழனிச்சாமி ஆகியோர், மேட்டூரில் ‘திருமண தகவல் மையம்’ என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற மேட்டூர் போலீசார், தம்பதியினரை கைது செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை மீட்டனர். மேலும், ஓமலூர் பெண்கள் காப்பகத்தில் அந்த பெண்களை ஒப்படைத்தனர்.
News April 7, 2025
சேலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள்

பாம்பன் பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் வழியாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயிலும், ஓஹா- ராமேஸ்வரம் ரயிலும் பழையபடி ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16618) நாளை (ஏப்ரல் 08) இயக்கத்தில் பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரம் செல்கிறது.