News September 2, 2025

சேரன்மகாதேவியில் பயங்கரம்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு

image

சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் 3 இளம் சிறார்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ரகளையில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்று இளம் சிறார்கள் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் சேரன்மகாதேவியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Similar News

News September 4, 2025

நெல்லை மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

image

நெல்லை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை<> CLICK <<>>செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

நெல்லை பெண்கள் விமானப்படையில் பங்கேற்கலாம்

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவித்ததாவது தாம்பரத்தில் செப். 5 அன்று நடைபெறும் இந்திய விமானப்படையின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் 21 வயதுக்குள் திருமணமாகாத பெண்கள் பங்கேற்கலாம். 1.1.2005 முதல் 7.1.2008 வரை பிறந்தவர்கள், +2 அல்லது 3 ஆண்டு டிப்ளோமா, 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50% மதிப்பெண் பெற்றவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

News September 4, 2025

நெல்லையில் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின்கட்டணம்

image

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி உபமின் நிலையத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியில் கூலித்தொழிலாளி மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார்.இவரது வீட்டிற்கு இந்த மாதம் ரூ.1,61,31,281 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அவர் மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மின்வாரியம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது இன்று சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!